பொருட்பால் · குடியியல்
99. சான்றாண்மை
குறள் 981–990
- குறள் 981கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
- குறள் 982குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத் துள்ளதூஉ மன்று.
- குறள் 983அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடைந்துசால் பூன்றிய தூண்.
- குறள் 984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு.
- குறள் 985ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை
- குறள் 986சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல்.
- குறள் 987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.
- குறள் 988இன்மை ஒருவற் கிழிவன்று சால்பென்னும்திண்மையுண் டாகப் பெறின்.
- குறள் 989ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி யெனப்படு வார்.
- குறள் 990சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.