குறள் 981 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 199 · ஸ்கேன் 232 · மூலமும் சான்றும்