பொருட்பால் · குடியியல்

98. பெருமை

குறள் 971980
  1. குறள் 971
    ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்.
  2. குறள் 972
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.
  3. குறள் 973
    மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர்.
  4. குறள் 974
    ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
  5. குறள் 975
    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல்.
  6. குறள் 976
    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
  7. குறள் 977
    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்சீரல் லவர்கண் படின்.
  8. குறள் 978
    பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.
  9. குறள் 979
    பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்.
  10. குறள் 980
    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்.