குறள் 974 — பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 197 · ஸ்கேன் 230 · மூலமும் சான்றும்