பொருட்பால் · குடியியல் · பெருமை

குறள் 976பெருமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பெரியோரைப் போற்றி ஏற்றுக் கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 198 · ஸ்கேன் 231 · மூலமும் சான்றும்