பொருட்பால் · குடியியல்

97. மானம்

குறள் 961970
  1. குறள் 961
    இன்றி அமையாச் சிறப்பின் ஆயினும்குன்ற வருப விடல்.
  2. குறள் 962
    சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.
  3. குறள் 963
    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.
  4. குறள் 964
    தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.
  5. குறள் 965
    குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.
  6. குறள் 966
    புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்றிகழ்வார்பின் சென்று நிலை.
  7. குறள் 967
    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.
  8. குறள் 968
    மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து.
  9. குறள் 969
    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்.
  10. குறள் 970
    இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழு தேத்தும் உலகு.