பொருட்பால் · குடியியல் · மானம்

குறள் 969மானம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டுவிடுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 196 · ஸ்கேன் 229 · மூலமும் சான்றும்