குறள் 970 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழு தேத்தும் உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 196 · ஸ்கேன் 229 · மூலமும் சான்றும்