குறள் 968 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 196 · ஸ்கேன் 229 · மூலமும் சான்றும்