பொருட்பால் · குடியியல் · மானம்

குறள் 965மானம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 195 · ஸ்கேன் 228 · மூலமும் சான்றும்