பொருட்பால் · குடியியல்
96. குடிமை
குறள் 951–960
- குறள் 951இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.
- குறள் 952ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.
- குறள் 953நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.
- குறள் 954அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்.
- குறள் 955வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்று.
- குறள் 956சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்துமென் பார்.
- குறள் 957குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
- குறள் 958நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின் கண் ஐயப் படும்.
- குறள் 959நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
- குறள் 960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு.