குறள் 953 — குடிமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 193 · ஸ்கேன் 226 · மூலமும் சான்றும்