பொருட்பால் · குடியியல் · குடிமை

குறள் 959குடிமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மூலம் · அச்சுப் பக்கம் 194 · ஸ்கேன் 227 · மூலமும் சான்றும்