பொருட்பால் · குடியியல் · குடிமை

குறள் 956குடிமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்துமென் பார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 194 · ஸ்கேன் 227 · மூலமும் சான்றும்