பொருட்பால் · நட்பியல்

95. மருந்து

குறள் 941950
  1. குறள் 941
    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.
  2. குறள் 942
    மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியதற்றது போற்றி உணின்.
  3. குறள் 943
    அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
  4. குறள் 944
    அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.
  5. குறள் 945
    மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபா டில்லை உயிர்க்கு.
  6. குறள் 946
    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.
  7. குறள் 947
    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.
  8. குறள் 948
    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.
  9. குறள் 949
    உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.
  10. குறள் 950
    உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்து.