பொருட்பால் · நட்பியல்

94. சூது

குறள் 931940
  1. குறள் 931
    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
  2. குறள் 932
    ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
  3. குறள் 933
    உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.
  4. குறள் 934
    சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன் றில்.
  5. குறள் 935
    கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.
  6. குறள் 936
    அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.
  7. குறள் 937
    பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.
  8. குறள் 938
    பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது.
  9. குறள் 939
    உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.
  10. குறள் 940
    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.