குறள் 940 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்கிற ஆசையும் ஒன்றேதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 190 · ஸ்கேன் 223 · மூலமும் சான்றும்