பொருட்பால் · நட்பியல்
93. கள்ளுண்ணாமை
குறள் 921–930
- குறள் 921உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார்.
- குறள் 922உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்.
- குறள் 923ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி.
- குறள் 924நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
- குறள் 925கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்.
- குறள் 926துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
- குறள் 927உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
- குறள் 928களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.
- குறள் 929களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
- குறள் 930கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.