பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமை

குறள் 929கள்ளுண்ணாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குடிபோதைக்கு அடிமையாகிவிட்டவனைத் திருந்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக் கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

மூலம் · அச்சுப் பக்கம் 188 · ஸ்கேன் 221 · மூலமும் சான்றும்