பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமை

குறள் 928கள்ளுண்ணாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மது அருந்தவே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும்போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

மூலம் · அச்சுப் பக்கம் 188 · ஸ்கேன் 221 · மூலமும் சான்றும்