குறள் 927 — கள்ளுண்ணாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 188 · ஸ்கேன் 221 · மூலமும் சான்றும்