பொருட்பால் · நட்பியல்
92. வரைவின் மகளிர்
குறள் 911–920
- குறள் 911அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்.
- குறள் 912பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல்.
- குறள் 913பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ அற்று.
- குறள் 914பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர்.
- குறள் 915பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்.
- குறள் 916தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்.
- குறள் 917நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்.
- குறள் 918ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்பமாய மகளிர் முயக்கு.
- குறள் 919வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு.
- குறள் 920இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு.