பொருட்பால் · நட்பியல்

91. பெண்வழிச் சேறல்

குறள் 901910
  1. குறள் 901
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது.
  2. குறள் 902
    பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்.
  3. குறள் 903
    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.
  4. குறள் 904
    மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று.
  5. குறள் 905
    இல்லாளை யஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.
  6. குறள் 906
    இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர்.
  7. குறள் 907
    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.
  8. குறள் 908
    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங் கொழுகு பவர்.
  9. குறள் 909
    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ணேவல் செய்வார்கண் இல்.
  10. குறள் 910
    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.