பொருட்பால் · நட்பியல்
90. பெரியாரைப் பிழையாமை
குறள் 891–900
- குறள் 891ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை.
- குறள் 892பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்பேரா இடும்பை தரும்.
- குறள் 893கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு.
- குறள் 894கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்காற்றாதார் இன்னா செயல்.
- குறள் 895யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.
- குறள் 896எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
- குறள் 897வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.
- குறள் 898குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.
- குறள் 899ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.
- குறள் 900இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.