பொருட்பால் · நட்பியல் · பெரியாரைப் பிழையாமை

குறள் 894பெரியாரைப் பிழையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்காற்றாதார் இன்னா செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.

மூலம் · அச்சுப் பக்கம் 181 · ஸ்கேன் 214 · மூலமும் சான்றும்