பொருட்பால் · நட்பியல்

89. உட்பகை

குறள் 881890
  1. குறள் 881
    நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்.
  2. குறள் 882
    வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு.
  3. குறள் 883
    உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்.
  4. குறள் 884
    மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.
  5. குறள் 885
    உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்.
  6. குறள் 886
    ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.
  7. குறள் 887
    செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி.
  8. குறள் 888
    அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுட்பகை உற்ற குடி.
  9. குறள் 889
    எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு.
  10. குறள் 890
    உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போ டுடனுறைந் தற்று.