குறள் 883 — உட்பகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 179 · ஸ்கேன் 212 · மூலமும் சான்றும்