பொருட்பால் · நட்பியல்
88. பகைத்திறம் தெரிதல்
குறள் 871–880
- குறள் 871பகையென்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற் றன்று.
- குறள் 872வில்வேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.
- குறள் 873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.
- குறள் 874பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற் றுலகு.
- குறள் 875தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.
- குறள் 876தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.
- குறள் 877நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.
- குறள் 878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.
- குறள் 879இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
- குறள் 880உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்.