குறள் 875 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 177 · ஸ்கேன் 210 · மூலமும் சான்றும்