பொருட்பால் · நட்பியல் · பகைத்திறம் தெரிதல்

குறள் 874பகைத்திறம் தெரிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற் றுலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.

மூலம் · அச்சுப் பக்கம் 177 · ஸ்கேன் 210 · மூலமும் சான்றும்