குறள் 876 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்பு காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 178 · ஸ்கேன் 211 · மூலமும் சான்றும்