பொருட்பால் · நட்பியல்
87. பகைமாட்சி
குறள் 861–870
- குறள் 861வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை.
- குறள் 862அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு.
- குறள் 863அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு.
- குறள் 864நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.
- குறள் 865வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க் கினிது.
- குறள் 866காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும்.
- குறள் 867கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை.
- குறள் 868குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கினனிலனாம் ஏமாப் புடைத்து.
- குறள் 869செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.
- குறள் 870கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.