பொருட்பால் · நட்பியல்
86. இகல்
குறள் 851–860
- குறள் 851இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய்.
- குறள் 852பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை.
- குறள் 853இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்.
- குறள் 854இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.
- குறள் 855இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிகலூக்கும் தன்மை யவர்.
- குறள் 856இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து.
- குறள் 857மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்.
- குறள் 858இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகலூக்கின் ஊக்குமாங் கேடு.
- குறள் 859இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு.
- குறள் 860இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு.