பொருட்பால் · நட்பியல் · இகல்

குறள் 852இகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 173 · ஸ்கேன் 206 · மூலமும் சான்றும்