குறள் 851 — இகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 173 · ஸ்கேன் 206 · மூலமும் சான்றும்