பொருட்பால் · நட்பியல் · புல்லறிவாண்மை

குறள் 850புல்லறிவாண்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்தலகையா வைக்கப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்” களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 172 · ஸ்கேன் 205 · மூலமும் சான்றும்