பொருட்பால் · நட்பியல்
85. புல்லறிவாண்மை
குறள் 841–850
- குறள் 841அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு.
- குறள் 842அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்.
- குறள் 843அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது.
- குறள் 844வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னுஞ் செருக்கு.
- குறள் 845கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்.
- குறள் 846அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.
- குறள் 847அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.
- குறள் 848ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.
- குறள் 849காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு.
- குறள் 850உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்தலகையா வைக்கப் படும்.