குறள் 849 — புல்லறிவாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
மூலம் · அச்சுப் பக்கம் 172 · ஸ்கேன் 205 · மூலமும் சான்றும்