பொருட்பால் · நட்பியல் · புல்லறிவாண்மை

குறள் 844புல்லறிவாண்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னுஞ் செருக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 171 · ஸ்கேன் 204 · மூலமும் சான்றும்