பொருட்பால் · நட்பியல் · புல்லறிவாண்மை

குறள் 845புல்லறிவாண்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர்போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 171 · ஸ்கேன் 204 · மூலமும் சான்றும்