பொருட்பால் · நட்பியல் · புல்லறிவாண்மை

குறள் 842புல்லறிவாண்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 171 · ஸ்கேன் 204 · மூலமும் சான்றும்