பொருட்பால் · நட்பியல்
84. பேதைமை
குறள் 831–840
- குறள் 831பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்.
- குறள் 832பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கண் செயல்.
- குறள் 833நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்.
- குறள் 834ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையிற் பேதையார் இல்.
- குறள் 835ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.
- குறள் 836பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.
- குறள் 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.
- குறள் 838மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்கையொன் றுடைமை பெறின்.
- குறள் 839பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.
- குறள் 840கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.