குறள் 834 — பேதைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையிற் பேதையார் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 169 · ஸ்கேன் 202 · மூலமும் சான்றும்