குறள் 833 — பேதைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 169 · ஸ்கேன் 202 · மூலமும் சான்றும்