பொருட்பால் · நட்பியல்

83. கூடா நட்பு

குறள் 821830
  1. குறள் 821
    சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.
  2. குறள் 822
    இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.
  3. குறள் 823
    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது.
  4. குறள் 824
    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்.
  5. குறள் 825
    மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற் றன்று.
  6. குறள் 826
    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.
  7. குறள் 827
    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்.
  8. குறள் 828
    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து.
  9. குறள் 829
    மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துநட்பினுட் சாப்புல்லற் பாற்று.
  10. குறள் 830
    பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்டகநட் பொரீஇ விடல்.