பொருட்பால் · நட்பியல் · கூடா நட்பு

குறள் 822கூடா நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலைமகளிரின் மனம்போல் உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 167 · ஸ்கேன் 200 · மூலமும் சான்றும்