பொருட்பால் · நட்பியல்

82. தீ நட்பு

குறள் 811820
  1. குறள் 811
    பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.
  2. குறள் 812
    உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்.
  3. குறள் 813
    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.
  4. குறள் 814
    அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை.
  5. குறள் 815
    செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.
  6. குறள் 816
    பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.
  7. குறள் 817
    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.
  8. குறள் 818
    ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.
  9. குறள் 819
    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.
  10. குறள் 820
    எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றிற் பழிப்பார் தொடர்பு.