பொருட்பால் · நட்பியல்

81. பழைமை

குறள் 801810
  1. குறள் 801
    பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
  2. குறள் 802
    நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குப்பாதல் சான்றோர் கடன்.
  3. குறள் 803
    பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங் கமையாக் கடை.
  4. குறள் 804
    விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின்.
  5. குறள் 805
    பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின்.
  6. குறள் 806
    எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
  7. குறள் 807
    அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.
  8. குறள் 808
    கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின்.
  9. குறள் 809
    கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு.
  10. குறள் 810
    விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார்.