குறள் 807 — பழைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 164 · ஸ்கேன் 197 · மூலமும் சான்றும்