குறள் 803 — பழைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங் கமையாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப் போகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 163 · ஸ்கேன் 196 · மூலமும் சான்றும்